தற்போதைய செய்திகள்

மார்ச் 30-ல் குடியரசுத் தலைவருக்கு அறுவை சிகிச்சை

27th Mar 2021 07:07 PM

ADVERTISEMENT

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மார்ச் 30ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் பரிசோதனைக்காக தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் மேல் சிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று மதியம் மாற்றப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

ADVERTISEMENT

இன்று மதியம் குடியரசுத் தலைவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர். இதையடுத்து, மார்ச் 30ஆம் தேதி காலை அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்தனர்.

Tags : bypass surgery president
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT