தற்போதைய செய்திகள்

தில்லியில் பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பில்லை: மாநில அமைச்சர்

27th Mar 2021 03:20 PM

ADVERTISEMENT

தில்லியில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்த வாய்ப்பில்லை என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பல மாநிலங்களில் இரவுநேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தில்லி நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறியாதாவது,

தில்லியில் மீண்டும் பொதுமுடக்கம் போட வாய்ப்பில்லை. கடந்த முறை பொதுமுடக்கம் அமல்படுத்தியும் நோய் பரவல் இருந்தது. நோய்ப் பரவலை தடுக்க பொதுமுடக்கம் ஒரு தீர்வு இல்லை என நினைகிறேன். மக்கள் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க கற்றுக் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

மேலும், தில்லி கரோனா மையங்களில் உள்ள படுக்கையறைகளில் 20 சதவீதம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. தேவைக்கேற்ப படுக்கைகள் அதிகரிக்கப்படும் எனக் கூறினார்.

தில்லியில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1,534 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Tags : Delhi lockdown
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT