தற்போதைய செய்திகள்

வடகொரிய அதிபரை பின்பற்றும் மம்தா: மத்திய அமைச்சர்

27th Mar 2021 04:42 PM

ADVERTISEMENT

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பாணியை மேற்குவங்க முதல்வர் மம்தா பின்பற்றுவதாக மத்திய கால்நடை அமைச்சர் கிரிராஜ் சிங் சனிக்கிழமை விமர்சித்துள்ளார்.

மேற்குவங்க சட்டப்பேரவையின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் சகோதரரும், பாஜக உறுப்பினருமான சவுமேந்து அதிகாரியின் காரை மேற்குவங்கத்தில் இன்று காலை சிலர் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து கிரிராஜ் சிங் கூறியதாவது,

ADVERTISEMENT

சவுமேந்து அதிகாரி மீது நடத்தப்பட்ட தாக்குதல் மம்தாவின் விரக்தியை காட்டுகிறது. அவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உனின் பாணியைப் பின்பற்றுகிறார்.

அவரின் எதிரிகளை உயிருடன் பார்க்க முடியாத அளவிற்கு கொடூரமாக மாறிவிட்டார். மே 2ஆம் தேதிக்கு பிறகு கண்டிப்பாக ஆட்சியில் இருந்து அகற்றப்படுவார் என தெரிவித்தார்.

Tags : Giriraj Singh west bengal election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT