தற்போதைய செய்திகள்

நேபாளத்திற்கு மேலும் ஒரு லட்சம் தடுப்பூசிகள் வழங்கியது இந்தியா

27th Mar 2021 04:01 PM

ADVERTISEMENT

இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு ஒரு லட்சம் தடுப்பூசிகளை சனிக்கிழமை வழங்கியுள்ளது.

அண்டை நாடுகளான பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி முதல் தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

இதனையடுத்து நேபாளத்திற்கு 3.50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில், இன்று ஒரு லட்சம் தடுப்பூசிகள் இந்தியா அனுப்பியது.

இதுகுறித்து நேபாள அதிகாரி ஒருவர் கூறுகையில்,

ADVERTISEMENT

தடுப்பூசி ஏற்றிவரும் ஏர் இந்தியா விமானம் இன்று மதியம் காத்மாண்டாவில் தரையிறங்கும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், மோசமான வானிலை காரணமாக தரையிறக்க முடியவில்லை. 

இருப்பினும், விமானமானது நேபாள எல்லைக்குள் வந்துவிட்டதாக தெரிவித்தார்.

 

Tags : nepal Corona vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT