தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரத்தில் இரவுநேர பொதுமுடக்கம்: மீறினால் ரூ.1,000 அபராதம்

27th Mar 2021 07:29 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படவுள்ள இரவுநேர பொதுமுடக்கத்தை மீறினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவி வரும் சூழலில், மகாராஷ்டிரத்தில் நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று(மார்ச் 27) நள்ளிரவு முதல் இரவுநேர பொதுமுடக்கத்தை மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர அரசு வெளியிட்ட உத்தரவில்,

ADVERTISEMENT

இன்று நள்ளிரவு முதல் இரவு 8 மணிமுதல் காலை 7 மணிவரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படவுள்ளது. கடற்கரை, உணவகங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்கள் இரவு நேரத்தில் மூடப்படும். 

பொதுமுடக்கத்தை மீறுபவர்களுக்கு ரூ.1,000, முகக்கவசம் அணியாவிடில் ரூ.500, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். 

Tags : maharastra night curfew
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT