தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரத்தில் மேலும் 35,726 பேருக்கு கரோனா

27th Mar 2021 09:03 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 35,726 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டிலேயே கேரளம், மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகம், தமிழகம் மத்தியப் பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ரத்தில் தினசரி பாதிப்பு அதிகமாக உள்ளது. 

இதைக் கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசும் திணறி வருகிறது. இங்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 35,726 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 26,73,461ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவுக்கு ஒரேநாளில் மேலும் 166 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 54,073ஆக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

தற்போதைய நிலவரப்படி 3,03,475 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 14,523 பேர் குணமடைந்தனர். இதுவரை 23,14,579 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

Tags : maharastra Corona
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT