தற்போதைய செய்திகள்

திருச்சி ஆட்சியர், சார் ஆட்சியர், எஸ்.பி. பணியிடமாற்றம்

25th Mar 2021 09:23 PM

ADVERTISEMENT

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் காவல் கண்காணிபாளர் ராஜன் ஆகியோரை பணியிடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிபாளர் மீது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, அவர்களை தேர்தல் அல்லாத பணிகளுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சி மாவட்ட புதிய ஆட்சியராக திவ்யதர்ஷினி, ஸ்ரீரங்கம் சார் ஆட்சியராக விசு மகாஜன் மற்றும் காவல்துறை கண்காணிபாளராக மயிவாகனன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT