பிரதமர் மோடி நாளை வங்கதேசத்திற்கு இரண்டு நாள் பயணமாக செல்கிறார்.
வங்கதேசத்தின் தேசிய தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்விற்கு இந்திய பிரதமர் மோடியை, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார்.
இதனையடுத்து கரோனா பொதுமுடக்கத்திற்கு பின்பு, முதல்முறையாக வெளிநாட்டிற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இதுகுறித்து மோடி வெளியிட்ட செய்தியில்,
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைத்ததையடுத்து மார்ச் 26 மற்றும் 27ஆம் தேதி வங்கதேசம் செல்கிறேன்.
கரோனா பொதுமுடக்கத்திற்கு பின் முதல்முறையாக அண்டை நாடான வங்கதேசத்திற்கு செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நாளை வங்கதேசத்தில் நடைபெறவுள்ள தேசிய தினம் மற்றும் வங்கதேச தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவில் பங்குபெறவுள்ளேன்.
கடந்த நூற்றாண்டின் மிக உயர்ந்த தலைவரான முஜிபூரின் வாழ்க்கை பல கோடி பேரின் வாழ்க்கைக்கு ஊக்கவிப்பதாக உள்ளது. துங்கிபாராவில் உள்ள அவரின் நினைவிடத்திற்கு செல்ல உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.