மேற்குவங்கத்தில் மம்தா இருக்கும் வரை மலேரியா நோய் இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் தேசிய தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜார்கிராம் பகுதியில் இன்று அமித் ஷா பேசுகையில்,
மம்தா ஆட்சி இருக்கும் வரை மலேரியாவிலிருந்து நீங்கள் விடுபடமாட்டீர்கள். அவருக்கு டெங்கு மற்றும் மலேரியா நோய்கள் நண்பர்கள். எங்களுக்கு வாக்களியுங்கள் 2 ஆண்டுகளில் நோய்களை ஒழிப்போம் எனக் கூறினார்.
மேலும், பிரதமர் மோடி ஒருபுறம் பழங்குடி மக்களின் நலனுக்காக பணியாற்றுகிறார். ஆனால், மம்தா அவரது மருமகனுக்காக பணியாற்றி வருகிறார் எனத் தெரிவித்தார்.