தற்போதைய செய்திகள்

மக்களவையிலிருந்து சிவசேனை எம்.பி.க்கள் வெளிநடப்பு

22nd Mar 2021 02:41 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து எதிர்க்கட்சியினர் மக்களவையில் கேள்வி எழுப்பியதை அடுத்து சிவசேனை எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

மகாராஷ்டிரத்தில் காவல்துறை அதிகாரிகள் மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் வசூலிக்க வேண்டும் என மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வலியுறுத்தியதாக ஊா்காவல் படை டிஜிபி பரம்வீா் சிங் குற்றம்சாட்டியுள்ளாா்.

இதையடுத்து, இன்று கூடிய மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரில், மகாராஷ்டிரத்தில் எழுந்துள்ள புகார் குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், சிவசேனையின் மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தைவிட்டு வெளிநடப்பு செய்தார்கள்.

ADVERTISEMENT

Tags : lok sabha Shiv Sena
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT