தற்போதைய செய்திகள்

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஒவைசி

22nd Mar 2021 04:56 PM

ADVERTISEMENT

அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

முதல் நாளில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சில தலைவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், இன்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாடு முழுவதும் இதுவரை 4.5 கோடி பேருக்கு மேல் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

Tags : Asaduddin Owaisi Corona vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT