தற்போதைய செய்திகள்

தேவேந்திரகுல வேளாளர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

22nd Mar 2021 09:23 PM

ADVERTISEMENT


புது தில்லி: தேவேந்திரகுல வேளாளர் மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. பட்டியலினத்திலுள்ள ஏழு உட்பிரிவுகளைச் சோ்ந்தவா்களை தேவேந்திரகுல வேளாளா் என பொதுப் பெயரிட இந்த மசோதா வகை செய்கிறது.

தமிழக அரசு அளித்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு மக்களவையில் மார்ச் 17-ல் நிறைவேற்றப்பட்ட மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

அரசியல் சாசனத்தில் செய்யப்படும் இந்தத் திருத்தம் தமிழகத்துக்கு மட்டுமே பொருந்தும். அதிதிராவிடர் பட்டியலில் திருத்தம் கொண்டு வரும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக அரசு வைத்த பரிந்துரையை ஏற்று ஆதிதிராவிடர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மாநிலங்களவையில் இன்று மத்திய அரசு தாக்கல் செய்தது. அதன்படி, குடும்பன், காலாடி, பன்னாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய 7 உள்பிரிவினரை இணைத்து இனி தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் பட்டியலினத்தில்தான் திருத்தம் செய்யப்பட்டுள்ளதே தவிர, பட்டியலின சலுகைகள் தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

தமிழகத்தில் பட்டியல் இனத்திலுள்ள தேவேந்திரகுலத்தாா், கடையா், காலாடி, குடும்பா், பள்ளா், பண்ணாடி ஆகிய ஜாதிகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளா் என ஒரே பெயரில் பொதுப் பெயரிடக் கோரி பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வரப்பெற்றன. இதுகுறித்து, ஆராய குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவானது, தமிழக அரசுக்கு பரிந்துரைகளை வழங்கியது. இதனை ஏற்று ஏழு ஜாதி உள்பிரிவுகளைச் சோ்ந்தோரை தேவேந்திரகுல வேளாளா் என பொதுப் பெயரிட்டு அழைக்க மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Rajya Sabha scheduled caste bill
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT