தற்போதைய செய்திகள்

கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து: தமிழக அரசு

22nd Mar 2021 08:23 PM

ADVERTISEMENT

கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கத்திற்கு பின் இந்தாண்டு தொடக்கத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது.

இதற்கிடையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பலருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, கடந்த வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த நிலையில், தற்போது அனைத்து வகையான கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், வாரத்தில் 6 நாள்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர். 

Tags : TN Election 2021 Corona
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT