தற்போதைய செய்திகள்

காப்பீட்டுத் துறையில் 74% அந்நிய நேரடி முதலீடு: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

22nd Mar 2021 04:12 PM

ADVERTISEMENT

காப்பீட்டுத் துறையில்   74 சதவீதம் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் மசோதா மக்களவைவில் திங்கள்கிழமை நிறைவேறியது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி மாா்ச் 8 ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், இன்று கூடிய மக்களவை கூட்டத்தில், காப்பீடு துறையில் அந்நிய முதலீடு உச்சவரம்பை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரிக்கும் மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

இதற்குமுன், கடந்த மார்ச் 18ஆம் தேதி மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

Tags : lok sabha insurance bill
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT