தற்போதைய செய்திகள்

பாஜக தேர்தல் குழுக் கூட்டம்: மோடி, ஜெ.பி.நட்டா பங்கேற்பு

17th Mar 2021 09:38 PM

ADVERTISEMENT

5 மாநிலத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தில்லியில் பாஜக மத்திய தேர்தல் குழுக் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் பாஜகவின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT