தற்போதைய செய்திகள்

அதிகரிக்கும் கரோனா: ஒளரங்காபாத்தில் 5 பேருக்கு மேல் கூடத் தடை

17th Mar 2021 03:59 PM

ADVERTISEMENT

ஒளரங்காபாத் மாவட்டத்தில் ஏப்ரல் 4 வரை பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடத் தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலையால் பல மாநிலங்களில் மீண்டும் நோய்ப் பரவல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஒளரங்காபாத் மாவட்டத்திலும் கடந்த சில நாள்களாக கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடத் தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் கடந்த சில வாரங்களாக நாள்தோறும் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT