தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 21,289 ரெளடிகள் மீது நடவடிக்கை

17th Mar 2021 08:48 PM

ADVERTISEMENT

 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இதுவரை 21,289 ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது. 

இதுவரை 21,289 ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், 732 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

18,183 பேரிடம் நன்னடத்தை உறுதி மொழி பத்திரத்தில் கையொப்பம் வாங்கப்பட்டுள்ளது. பிடியாணை உள்ள 14,343 பேரை தனிப்படை அமைத்து கைது செய்துள்ளனர்.

மேலும், தமிழகத்தில் இதுவரை 18,593 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT