தற்போதைய செய்திகள்

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் சித்தராமையா

15th Mar 2021 06:29 PM

ADVERTISEMENT

கர்நாடக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

முதல் நாளில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சில தலைவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், இன்று கர்நாடக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாடு முழுவதும் இதுவரை 3 கோடி பேருக்கு மேல் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT