தற்போதைய செய்திகள்

‘ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும்’: மம்தா

15th Mar 2021 03:12 PM

ADVERTISEMENT

வருகின்ற மே மாதம் முதல் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வரும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புருலியா பகுதியில் பிரசாரம் செய்த மம்தா பேசியதாவது,

தொடர்ந்து திரிணமூல் ஆட்சியில் இருக்கும். நீங்கள் தொடர்ந்து இலவச ரேஷன் பொருள்களை பெறுவீர்கள். நாங்கள் உங்கள் வீடு தேடி வந்து ரேஷன் பொருள்களை வழங்குவோம். வரும் மே மாதத்திற்கு பிறகு நீங்கள் ரேஷன் கடைக்கு வர தேவையில்லை எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

மேலும் கூட்டத்தில் பேசுகையில், எனக்கு பாஜக தேவையில்லை, காங்கிரஸ் - இடதுசாரிகளை விரும்பவில்லை, பாஜகவிடமிருந்து விடைபெறுங்கள் என எதிர்கட்சிகளுக்கு எதிராக மம்தா முழக்கங்களை எழுப்பினார். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT