மம்தா தாக்கல் செய்த வேட்புமனுவில் 6 வழக்குகளை அவர் குறிப்பிடவில்லை என பாஜகவின் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இதில் போட்டியிட, நந்திகிராம் தொகுதியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவருக்கு எதிராக திரிணமூலில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று சுவேந்து அதிகாரி பேசுகையில்,
நந்திகிராமில் மம்தா தாக்கல் செய்த வேட்புமனுவை நான் இன்று எதிர்கின்றேன். அந்த வேட்புமனுவில் 6 வழக்குகளை அவர் குறிப்பிடவில்லை.
2018ஆம் ஆண்டில், அசாமில் பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகள் மற்றும் சிபிஐ பதிவு செய்து நிலுவையில் உள்ள மற்றொரு வழக்கு குறித்தும் அவர் வேட்புமனுவில் குறிப்பிடவில்லை.
மம்தாவின் அடித்தளம் பொய்களை அடிப்படையாகக் கொண்டது என்றார்.