கரோனா அதிகரிக்கும் மாவட்டங்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறுகையில்,
கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. நிலைமை மோசமடைந்தால், அதிக வழக்குகள் பதிவு செய்யப்படும் மாவட்டங்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்படும்.
மும்பையில் கரோனா விதிமுறைகளை பின்பற்றாத 20 லட்சத்திற்கும் அதிகமானோரிடம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
நேற்று ஒரே நாளில், 16,620 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.