தேனி மாவட்டம் கம்பம் நேதாஜி அறக்கட்டளை சார்பில் இந்திய விண்வெளி ஆய்வுக்கு தேர்வாகியுள்ள மாணவி உதயகீர்த்திகாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் ககன்யான் திட்டமான நிலவிற்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு அகில இந்திய அளவில் தேர்வு பெறுவதற்காக அனைத்து பயிற்சிகளையும் முடித்து இறுதியாக கனடாவில் ஒரு பயிற்சிக்கு செல்ல தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த மாணவி உதயகீர்த்திகா தயார் நிலையில் உள்ளார்
தேனி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணாக இருப்பதால் அவருக்கு ஊக்கமளிக்கும் பொருட்டு கம்பத்தில் உள்ள நேதாஜி அறக்கட்டளையும், தன்னார்வலர்களும் இணைந்து பாராட்டு மற்றும் நிதியளிப்பு விழா நடைபெற்றது.
சுமார் ரூபாய் 50 ஆயிரம் அளவில் நிதியளிப்பும், மேலும் பொருளாதார உதவிகள் செய்வதற்கும் நிகழ்ச்சியில் முடிவெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உத்தமபாளையம் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் நா.சின்னக்கண்ணு தலைமை தாங்கினார், விவசாய சங்க செயலாளர் பொன்.காட்சிக்கண்ணன் வரவேற்று பேசினார்.
மேலும், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் கே.சிலைமணி, பாரதி தமிழ் இலக்கிய பேரவை நிறுவனத்தலைவர் பாரதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பஞ்சு ராஜா நன்றி கூறினார்.