சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்ய நாளை காங்கிரஸ் மத்திய தேர்வுக் குழு ஆலோசனை நடத்துகிறது.
தமிழகம், புதுவை, அசாம், கேரளம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27 முதல் பல கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்து, பிரசாரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளது.
இதையடுத்து, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்வதற்காக செவ்வாய்க்கிழமை காணொலி மூலம் காங்கிரஸ் மத்திய தேர்வுக் குழு ஆலோசனையில் ஈடுபடவுள்ளது.
தமிழகம் மற்றும் கேரளத்திற்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்துள்ளது.