தற்போதைய செய்திகள்

மக்களவை மார்ச் 15 வரை ஒத்திவைப்பு

10th Mar 2021 02:58 PM

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய அமளியால் மார்ச் 15 வரை மக்களவை ஒத்தி வைக்கப்படுவதாக சபைத்தலைவர் அறிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி திங்கள்கிழமை (மாா்ச் 8) தொடங்கியது.

இந்நிலையில் மக்களவை கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தொடர்ந்து 3வது நாளாக அமளியில் ஈடுபட்டனர். 

இதனைத் தொடர்ந்து மக்களவை மார்ச் 15ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபைத் தலைவர் அறிவித்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT