தற்போதைய செய்திகள்

‘என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும்’: புதுவை பாஜக பொறுப்பாளர்

8th Mar 2021 09:57 PM

ADVERTISEMENT

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையேயான கூட்டணி குறித்த அறிவிப்பு  விரைவில் வெளியாகும் என புதுவை பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே கூட்டணி குறித்து கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் இன்று மாலை நடைபெற்ற நிலையில், பாஜகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேச்சுவார்த்தை குறித்து நிர்மல் குமார் சுரானா கூறுகையில்,

ADVERTISEMENT

பாஜக - என்.ஆர். காங்கிரசு இடையிலான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த இறுதி முடிவு இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் எனக் கூறினார்.

Tags : bjp NR Congress
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT