தற்போதைய செய்திகள்

ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் தொடரும் போராட்டம்

DIN

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

மியான்மரில் கடந்த மாதம் பிப்ரவரி 1ஆம் தேதி ராணுவத்தினர், ஆட்சியை கைபற்றியதை தொடர்ந்து, ராணுவ ஆட்சியை திரும்ப பெறக் கோரி நாடு முழுவதும் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேயில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் அமைதியான முறையில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

போராட்டத்தை கலைக்க, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டாக்களால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை பாதுகாப்புப் படையினர் தாக்கினர்.

இதையடுத்து, போராட்டக்காரர்கள் தடுப்புகள் மீது ஏறியும், பக்கத்தில் இருந்த வீடுகளுக்குள் புகுந்தும் ராணுவத்தினரிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தனர்.

இருப்பினும், பாதுகாப்புப் படையினர் வீடு வீடாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர்.

மேலும், யாங்கோன் மற்றும் மியான்மரின் முன்னாள் தலைநகரான பாகன் உள்ளிட்ட பகுதிகளிலும், துப்பாக்கிச் சூடு எச்சரிக்கை விடுத்து போராட்டக்காரர்களை ராணுவத்தினர் கலைத்தனர்.

இதுவரை மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 50க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT