தற்போதைய செய்திகள்

திமுக கூட்டணியில் ஆதித் தமிழர் பேரவைக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

8th Mar 2021 07:48 PM

ADVERTISEMENT

 

ஆதித் தமிழர் பேரவைக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் சார்பில் முக்கியக் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடர்ந்து பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் ஆதித் தமிழர் பேரவையுடன் பேச்சுவார்த்தை இன்று முடிவு செய்யப்பட்டு, உதயசூரியன் சின்னத்தில் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

ADVERTISEMENT

இந்த ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் ஆதியமான் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

திமுக கூட்டணியில் இதுவரை 9 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள், முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.

Tags : TN Election 2021 DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT