தற்போதைய செய்திகள்

திமுக கூட்டணியில் வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

DIN

சென்னை: தமிழர் வாழ்வுரிமை கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் சார்பில் முக்கியக் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடர்ந்து பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தமிழர் வாழ்வுரிமை கட்சியுடன் பேச்சுவார்த்தை இன்று முடிவு செய்யப்பட்டு, உதயசூரியன் சின்னத்தில் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

இந்த ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழர் வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

திமுக கூட்டணியில் இதுவரை 8 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள், முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக கூட்டணியில் இன்னமும் கொமதே கட்சிக்கு மட்டும் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். திமுக கட்சியிடம் தற்போது 179 தொகுதிகள் கைவசம் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

SCROLL FOR NEXT