தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் மேலும் 482 பேருக்கு கரோனா

4th Mar 2021 06:35 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் புதிதாக 482 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,53,449ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 189 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 4 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,508ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் 490 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,36,963 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 3,978 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT