தற்போதைய செய்திகள்

பிகாரில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர் பலி

3rd Mar 2021 06:59 PM

ADVERTISEMENT

 

பிகாரில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர் செவ்வாய்க்கிழமை பலியாகியுள்ளார்.

பிகார் மாநிலம் பெகுசராய் பகுதியை சேர்ந்த சுபேந்து சுபம் (வயது 23) என்பவர் பாட்னாவில் உள்ள நாலந்தா மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவம் படித்து வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் கரோனா அறிகுறி ஏற்பட்டதால் பரிசோதனைக்கு மாதிரியை கொடுத்த மாணவர் தனது சொந்த ஊரான பெகுசராயில் தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து நாலந்தா கல்லூரி முதல்வர் சிவ குமாரி பிரசாத் கூறுகையில்,

கரோனா பரிசோதனை செய்த மாணவர் பரிசோதனை முடிவு வருவதற்குள் சொந்த ஊருக்கு சென்ற நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். அவரது பரிசோதனை முடிவு இன்று வெளியான நிலையில், அவருக்கு கரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது என்றார்.

Tags : Corona Death Bihar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT