தற்போதைய செய்திகள்

இன்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தலைவர்கள்

3rd Mar 2021 09:00 PM

ADVERTISEMENT

 

கரோனா தடுப்பூசி போடும் இரண்டாம் கட்டத்தின் 3ஆம் நாளில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் புதன்கிழமை தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 26 வரை 1.40 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில், மார்ச் 1 முதல் நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் 2ஆம் கட்டப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து, அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள்.

இன்று(மார்ச் 3) தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்:

1.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
2.தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
3.மத்திய அமைச்சர் அர்ஜூன் மேஹ்வால்
4.மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக்
5.கேரள முதல்வர் பினராயி விஜயன்
6.மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்திப் சிங் புரி
7.சிக்கிம் ஆளுநர் கங்கா பிரசாத்
8.கோவா முதல்வர் பிரமோத் சாவத்

நேற்று(மார்ச் 2) தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்:

1.மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
2.மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன்
3.மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
4.மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
5.மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி
6.தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா
7.மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி

மார்ச் 1 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்:

1.தில்லியில் பிரதமர் மோடி
2.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
3.சென்னையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு 
4.பிகார் முதல்வர் நீதிஸ் குமார்
5.ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்
6.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர்  
7.ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா
8.மத்திய அமைச்சர் ஜித்தேந்தர் சிங்
9.தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பாவர்

Tags : Corona vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT