தற்போதைய செய்திகள்

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஓ.பன்னீர்செல்வம்

3rd Mar 2021 08:05 PM

ADVERTISEMENT

 

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 26 வரையில் முதற்கட்டமாக 1.40 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி போடும் இரண்டாம் கட்டப் பணி மார்ச் 1 முதல் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார்.

Tags : O.Panneerselvam Corona vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT