தற்போதைய செய்திகள்

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ராஜ்நாத் சிங்

2nd Mar 2021 04:28 PM

ADVERTISEMENT


மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 26 வரை 1.40 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில், நேற்று(மார்ச் 1) முதல் நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் 2ஆம் கட்டப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இன்று போட்டுக் கொண்டார்.

ADVERTISEMENT

இதற்குமுன், நேற்று பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Corona vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT