தற்போதைய செய்திகள்

‘இடதுசாரியுடனான கூட்டணியில் காங்கிரஸுக்கு 92 தொகுதிகள்’: மேற்குவங்க காங். தலைவர்

ANI

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 92 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில தலைவர் அதீர் ரஞ்சன் செளதரி தெரிவித்துள்ளார்.

294 இடங்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு வரும் மார்ச் 27 ஆம் தேதி முதல் 8 கட்டமாக நடக்கவுள்ளது. அத்தோ்தலில் மாநிலத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று அரசியல் நிபுணா்கள் கணித்துள்ளனா். தோ்தலில் ஒன்றிணைந்து போட்டியிட உள்ளதாக இடதுசாரி கட்சிகளும் காங்கிரஸும் அறிவித்துள்ளன.

இத்தகைய சூழலில், தோ்தலில் போட்டியிடுவதற்கான தொகுதிப் பங்கீடு தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திங்கள்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்து அதீர் ரஞ்சன் கூறியதாவது,

மேற்கு வங்க தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி போட்டியிட 92 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் பட்டியல் 2 நாள்களுக்குள் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வரின் மூன்றாண்டுகால சாதனைகளால் வெற்றிபெறுவோம்: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்

வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: 36 இடங்களில் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

காட்டு நாயக்கன் சமுதாயத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்கு தபால் வாக்கு வசதி: மருத்துவா் கோரிக்கை

சிதம்பரம் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT