தற்போதைய செய்திகள்

தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனை: பிரதமர் மோடி மகிழ்ச்சி

DIN

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் இன்று படைத்துள்ள சாதனை மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி என்ற மத்திய அரசின் திருத்தப்பட்ட தடுப்பூசி கொள்கை அமலுக்கு வந்துள்ள நிலையில் நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 80 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டரில்,

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் இன்று படைத்துள்ள சாதனை மகிழ்ச்சியளிக்கிறது. கரோனா தொற்றுக்கு எதிரான நமது வலிமையான ஆயுதமாக தடுப்பூசி உள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும், அனைத்து குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய கடுமையாக போராடும் முன்களப் பணியாளர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூத்தாநல்லூரில் சிபிஐ வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

சீா்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி, பிரிண்டா் திருட்டு

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

கூத்தாநல்லூரில் முன்னாள் அமைச்சா் காமராஜ் அதிமுகவுக்கு வாக்கு சேகரிப்பு

SCROLL FOR NEXT