தற்போதைய செய்திகள்

நீட் தேர்வு தாக்கம்: நீதிபதி ஏ.கே.ராஜன் குழு ஆலோசனை

DIN

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு இன்று இரண்டாம் கட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் ஜூன் 23ஆம் தேதிக்குள் மின்னஞ்சலில் புகார் அளிக்கலாம் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, நீட்  தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்பை கோப்புகளாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT