தற்போதைய செய்திகள்

தெலங்கானாவில் ஜூலை 1 முதல் பள்ளிகள் திறப்பு

19th Jun 2021 07:10 PM

ADVERTISEMENT

தெலங்கானா மாநிலத்தில் பொதுமுடக்கத்தை முழுமையாக தளர்த்தியுள்ள நிலையில், ஜூலை 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதை அடுத்து தெலங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், பொதுமுடக்கமானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் தளர்வுகள் குறித்து ஆலோசிக்க மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடியது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தொற்றின் பரவல் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வந்த நிலையில், நாளை காலை 6 மணிமுதல் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை முழுவதுமாக தளர்த்திக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், ஜுலை 1ஆம் தேதி முதல் அனைத்து வகையான கல்வி நிறுவனங்களிலும், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்பு தொடங்கப்படும் என முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கரோனா மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என பல தரப்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், நேரடி வகுப்புகளை தெலங்கானா அரசு தொடங்குவது பெற்றோர் மற்றும் நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : school reopen Telangana
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT