தற்போதைய செய்திகள்

ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா பதவியேற்பு

19th Jun 2021 12:09 PM

ADVERTISEMENT

ஓட்டப்பிடாரம் தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

உடல்நலக் குறைவால் பதவியேற்காமல் இருந்த சண்முகையா, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு முன்பு இன்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக சாா்பில் பி. மோகன், திமுக சாா்பில் எம்.சி. சண்முகையா, புதிய தமிழகம் கட்சி தலைவா் க. கிருஷ்ணசாமி உள்பட மொத்தம் 17 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

இத்தேர்தலில் திமுக வேட்பாளா் 73,110 வாக்குகள் பெற்று தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் மோகனை விட 8,510 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

ADVERTISEMENT

2019இல் நடைபெற்ற இடைத்தோ்தலில் வெற்றி பெற்ற எம்.சி. சண்முகையா, 2-ஆவது முறையாக வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Tags : ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.சி.சண்முகையா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT