தற்போதைய செய்திகள்

நேபாளத்தில் வெள்ளம்: பலியானோர் எண்ணிக்கை 16ஆக உயர்வு

19th Jun 2021 01:20 PM

ADVERTISEMENT

நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமான 16 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழைக் காரணமாக நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் இந்திரவதி மற்றும் மேலம்ஷி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை பக்மதி மாகாணத்தில் உள்ள சிந்துபல்சவுக் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஊருக்குள் புகுந்த ஆற்றுநீர் பலரை அடித்துச் சென்றது.

அடித்துச் சென்றவர்களில் 16 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும், காணாமல் போன 22 பேரை தேடும் பணிகளை நேபாள ராணுவம் மேற்கொள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT