தற்போதைய செய்திகள்

கரோனா பலி விவரங்கள்: ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு

19th Jun 2021 05:53 PM

ADVERTISEMENT

 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் விவரங்களை மருத்துவமனைகள் சரியாக தருகின்றனவா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

கரோனாவால் உயிரிழப்பவர்களின் விவரங்கள் முழுமையாக தெரிவிக்காததால் இறப்பு சான்றுகள் தருவதில் சிக்கல் ஏற்படுவதாக பல தரப்புகளில் இருந்து புகார் எழுந்து வருகின்றது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வெ.இறையன்பு எழுதிய கடிதத்தில்,

ADVERTISEMENT

கரோனாவால் உயிரிழப்பவர்கள் பற்றிய முழுமையான விவரங்களை மருத்துவமனைகள் தருகின்றனவா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும்.

உயிரிழப்பவர்களின் பெயர், முகவரி, வயது உள்ளிட்டவற்றை மருத்துவமனைகள் சரியாக கொடுத்தால் மட்டுமே இறப்பு சான்றுகள் தர இயலும். இந்த தகவல்களை மருத்துவமனைகள் சரியாக தராததால் இறப்பு சான்று பெறுவதில் சிரமம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

இறப்பு, வாரிசு சான்றிதழ் தாமதமின்றி கிடைக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

Tags : Corona Death Details Iraianbu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT