தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

19th Jun 2021 12:42 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மேலும், 21ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

மீனவர்களுக்கு..

கேரளம், கர்நாடகம் கடலோரப் பகுதிகளிலும், தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : heavy rain tamilnadu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT