தற்போதைய செய்திகள்

மாநிலங்களின் கையிருப்பில் 2.87 கோடி தடுப்பூசிகள்: மத்திய அரசு

DIN

மாநிலங்களின் கையிருப்பில் 2.87 கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தியில்,

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 28,50,99,130 கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், 25,63,28,045 கரோனா தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டுள்ளது. கையிருப்பில் 2,87,71,085 தடுப்பூசிகள் உள்ளன. மேலும், மாநிலங்களுக்கு 52,26,460 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஜூன் 21 முதல் 18 வயதுடையோருக்கு செலுத்த அனைத்து மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT