தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

DIN

பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்பு முதல்முறையாக தில்லி சென்றுள்ள மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து மாநில வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை செய்ய சந்திப்பு நடைபெற்றது.

ஏறத்தாழ 25 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது நதிநீா் இணைப்பு, செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது, ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை, நீட் தேர்வு ரத்து,  ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து,  7 பேர் விடுதலை, போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைகள் விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சந்திப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சரை சந்தித்து தமிழகத்தின் சாா்பிலான முக்கிய கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த உள்ளாா்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT