தற்போதைய செய்திகள்

கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

DIN

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் தெரிவித்ததாவது,

தென்மேற்கு பருவ காற்றின் காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் தொடர்ந்து நாளையும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, குமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

சென்னை

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

நாளை வரை மன்னார் வளைகுடா, மத்திய வங்கக்கடல் பகுதிகளிலும், ஜூன் 18 வரை கேரளம், கர்நாடகம், கடல் பகுதிகளிலும், ஜூன் 19 வரை தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT