தற்போதைய செய்திகள்

பஞ்சாபில் கூடுதல் தளர்வுகள்: நாளைமுதல் திரையரங்குகள், உணவகங்களுக்கு அனுமதி

15th Jun 2021 06:10 PM

ADVERTISEMENT

கரோனா குறைந்ததையடுத்து பஞ்சாபில் நாளைமுதல் திரையரங்கு, உணவகம், உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதையடுத்து கடந்த மாதம் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. 

இந்நிலையில் கரோனா பரவல் உறுதியாகும் விகிதம் 2 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதையடுத்து பொதுமுடக்கத்தில் இன்று கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய தளர்வுகள்:

ADVERTISEMENT

திரையரங்குகள், உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்டவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் பணியாளர்கள் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரவுநேர ஊரடங்கானது இரவு 8 மணிமுதல் காலை 5 மணிவரையும், வார இறுதி நாள் ஊரடங்கு சனிக்கிழமை இரவு 8 மணிமுதல் திங்கள்கிழமை காலை 5 மணிவரையும் அமலில் இருக்கும்.

மதுபானக் கடைகளுக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT