தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி மறுப்பு

11th Jun 2021 12:54 PM

ADVERTISEMENT

கரோனா அவசரகால தேவைக்காக கோவேக்சின் தடுப்பூசியை பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி மறுத்துள்ளது.

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசி இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் அவசரகால தேவைக்கு அனுமதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றது.

இதனிடையே பாரத் பயோடெக் நிறுவனத்தின் அமெரிக்க ஒப்பந்ததாரரான ஒகுஜென் நிறுவனம் சார்பில் கோவேக்சின் தடுப்பூசியை அமெரிக்காவில் அவசரகால தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரியிருந்தது.

இந்நிலையில், கோவேக்சின் தடுப்பூசியை பயன்படுத்த ஒகுஜென் நிறுவனம் அளித்த கோரிக்கையை அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நிராகரித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், கோவேக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு விண்ணப்பிக்க கூடுதல் பரிசோதனை முடிவுகளை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : US Covaxin Vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT