தற்போதைய செய்திகள்

கோயம்பேடு சந்தையில் இதுவரை 8,239 வியாபாரிகளுக்கு தடுப்பூசி

10th Jun 2021 07:38 PM

ADVERTISEMENT

கோயம்பேடு சந்தையில் நேற்றுவரை 8,239 வியாபாரிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

சென்னை கோயம்பேடு சந்தையில் கரோனா தடுப்பூசி போடாத வியாபாரிகள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூன் 9 ஒரே நாளில் 703 வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், இதுவரை மொத்தம் 8,239 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், கரோனா தடுப்பூசி போடாத வியாபாரிகள் கோயம்பேடு சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT