தற்போதைய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு: பிரதமருக்கு சைக்கிள் அனுப்பி நூதன போராட்டம்

10th Jun 2021 03:29 PM

ADVERTISEMENT

நாட்டில் உயர்ந்துவரும் பெட்ரோல் விலையை கண்டித்து பிரதமருக்கு சைக்கிள் அனுப்பி தில்லி காங்கிரஸ் இளைஞரணியினர் நூதன முறையில் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியுள்ள நிலையில், தில்லியில் உள்ள காங்கிரஸ் இளைஞரணியினர் பல்வேறு விதமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு கூரியர் மூலம் சைக்கிள் அனுப்பும் நூதன போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

மேலும், மத்திய அமைச்சர்களும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுமான அமித் ஷா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டவர்களுக்கு சைக்கிள்களை அனுப்பியுள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT