தற்போதைய செய்திகள்

குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்மீது கடும் நடவடிக்கை: மயிலாடுதுறை எஸ்.பி.

8th Jun 2021 01:41 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.சுகுணாசிங் தெரிவித்தார்.  

மயிலாடுதுறை மாவட்டத்தின் 2-வது காவல் கண்காணிப்பாளராக கு.சுகுணாசிங் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  

புதிய மயிலாடுதுறை மாவட்டத்தின் 2-வது காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளேன். இப்புதிய மாவட்டத்தை முழுமையான காவல் மாவட்டமாக உருவாக்க துறைரீதியான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். பொதுமக்களுக்காகவே காவல்துறை உள்ளது என்பது உறுதிப்படுத்தப்படும். காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்ற வகையில் காவல்நிலையங்களில் பொதுமக்களின் பிரச்னைகள் குறித்து உரிய முறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் காலவிரயத்தை தவிர்க்க அனைத்து காவல் நிலையங்களில் உள்ள வரவேற்பு அறைகளில் உள்ள காவலர்களிடம் புகார்களை அளிக்கலாம். அப்புகார்களின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, ரேண்டம் அடிப்படையில் 10 சதவீத புகார்தாரர்களிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறியப்படும். இதன்மூலம் காவல்நிலையங்களில் பொதுமக்கள் அலைகழிக்கப்படுவதைத் தவிர்க்கப்படும். பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பாலியல் குற்றங்கள், மணல்திருட்டு, சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை போன்ற குற்றச்செயல்கள் முற்றிலும் தடுக்கப்படும். இதுதொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் எந்த நேரத்திலும் காவல் கண்காணிப்பாளரை அணுகலாம். மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க அரசின் முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளித்து செயல்பட வேண்டும் என்றார். 
 

ADVERTISEMENT

Tags : Mayiladuthurai superintendent of police
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT