தற்போதைய செய்திகள்

நியூட்ரினோ ஆய்வகத்தின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்: டிடிவி தினகரன்

8th Jun 2021 12:26 PM

ADVERTISEMENT

தேனி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க காட்டுயிர் அனுமதி கோரிய விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என அமமுகவின் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேனி மாவட்டத்தின் அம்பரப்பர் மலைப் பகுதியில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆய்வகம் அமைப்பதற்கான காட்டுயிர் அனுமதி கோரி தமிழக அரசுக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்ட செய்தியில்,

ADVERTISEMENT

நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க காட்டுயிர் அனுமதி கோரிய விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி இத்திட்டத்திற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட வனத்துறை அனுமதியையும் ரத்து செய்ய வேண்டும்.

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நியூட்ரினோ திட்டம் கூடாது: வைகோ

இந்த திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில், தமிழக அரசு முறையான வாதங்களை முன்வைத்து எந்த காரணம் கொண்டும் இத்திட்டத்தை செயல்படுத்தப்படுவதை நிரந்தரமாக தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

Tags : TTV dinakaran neutrino project
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT